சமுர்த்தி உதவி திட்டம்

வௌிமடை பிரதேச செயலகத்தில் 64 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் காணப்படுகின்றன இங்கு சிங்களவர் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழுகின்றனர்.

வௌிமடை பிரதேச செயலகம் நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு மேற்காகவும், ஊவ பரணகம பிரதேச செயலகத்திற்கு வடக்காகவும், ஹலிஎல , பண்டாரவலை பிரதேச செயலகங்களுக்கு கிழக்கேயும், ஹல்தும்முல்ல பிரதேச செயலகத்திற்கு தெற்காகவும் அமைந்துள்ளது.

இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றது. இங்கு 29094 குடும்பங்கள் காணப்படுவதோடு 4426 சமுர்தி பயனாளி குடும்பங்கள் காணப்படுகின்றன. மற்றும் 113133 சிறு குடும்பங்கள் காணப்படுகின்றன.

 இப்பிரதேச செயலக பிரிவில் 05 பிரசேங்களில் சமுர்தி காரியாலயங்கள் காணப்படுவதோடு 07 சமுர்த்தி முகாமையாளர்களும் 102 அபிவிருத்தி உத்தியோகத்தருகளும் சேவை புரிகின்றனர். சமுர்த்தி முகாமையாளர்கள் பிரதேச செயலாளரின் மேற்பார்வையின் கீழ் இயங்குகின்றனர். சமுர்த்தி திட்டம் தேசிய வறுமை ஒழிப்பு திட்டமாக 64 கிராம உத்தியோகத்திர் பிரிவுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

 சமுர்த்தி பயனாளிகள் சிறு குழுக்களாகவும் சங்கங்களாகவும் பிரிக்கப்பட்டு சமுர்த்தி வங்கி கங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இது பொருளாதாரத்தை மட்டும் மேம்படுத்துவதாக அமையாமல் சமூக கலாச்சார அபிவிருத்திக்கும் அடித்தளம் அமைக்கின்றது. வறியவர்களின் சமூக பாதுகாப்பையும் சமுர்தி திட்டம் உறுதிப்படுத்துகின்றது.

வெவ்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள் முன்வைக்கப்பட்டாலும் சிறந்த ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாக சமுர்தி திட்டம் காணப்படுகின்றது.

சமுர்த்தி திட்டத்தின் கீழ் காணப்படும் திட்டங்கள்

  • மானியங்கள் வழங்குதல்
  • வங்கிக்கடன் வசதிகள் 
  • சமூக பாதுகாப்பு திட்டங்கள்
  • சமூக அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட முன்வைக்கப்படுகின்றது

குடியுரிமை சாசனம்

Scroll To Top